
பிரச்சனைக்குக் காரணம்
கச்சத்தீவு. தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கையுடன் நட்புறவு பாராட்டுவதற்காக
இந்திய அரசு இலங்கைக்கு தானமாக 1976ல் வழங்கியது.
பெரும்பாலும் மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுவதும்
கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் கச்சத்தீவுன் அருகில் தான். இது தொடர்பாக தமிழக கடலோர காவல் நிலையங்களில் 400 க்கும் மேற்பட்ட
முதல் தகவல் அறிக்கை சிங்கள கடற்படையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது ( இதுவரை
ஒரு சிங்கள கடற்படையினர் கூட கைது செய்யப்படவில்லை) இவற்றில் பெரும்பாலும் குற்ற சம்பவம்
நடந்த இடமாக கச்சத்தீவுற்கு அருகில் , இந்திய
எல்லைக்குள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 க்கு முன்பு மீனவர்கள்
சுடப்படுவதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தான் என்றும், சிங்கள கடற்படையினர் விடுதலைப்புலிகள்
என்று தவறாக சுட்டுவிட்டதாக தமிழக அரசியல் கட்சிகள் சிலவும் , இந்திய அரசியல் கட்சிகள்
பலருமாய் கூப்பாடு போட்டார்கள்.
2009 க்குப்பின் எல்லைதாண்டுகிறார்கள்,
இரட்டைமடிவலையை பயன்படுத்துகிறார்கள், கடத்தல்காரர்கள் என்றும் அதனால்தான் சுட்டுக் கொள்கிறோம் என்று துணிச்சலாக சிங்கள அரசு கூறுகிறது. இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபின் இலங்கை பிரதமர் ரணில்விக்ரம சிங்கேயும் இதேபோல் பேட்டி கொடுக்கிறார்.இலங்கை
அரசியல் வாதிகளும் தங்கள் பங்குக்கு சென்னை விமானநிலையத்தில் இறங்கி மீனவர்களை சுடுவோம்
என்று பேட்டிகொடுகின்றனர்.
பாரதீய சனதாவும்( இந்திய
அரசும்) , சிங்கள அரசும் இப்போது மீனவர் சிக்கலை இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமான பிரச்சனை என்றும் தமிழக மீனவர்களை
சிங்கள கடற்படை தாக்குவதே இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதரத்திற்காக என்றும் பேசத்தொடங்கியுள்ளனர்.
இன்று (29.04.2015 )பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்
செய்தியாளர் சந்திப்பின்போது “இலங்கையில்
உள்ள தமிழ் பேசும் மீனவர்கள் எதிர்ப்பதால்தான், தமிழக மீனவர்களை அந்த நாட்டு கடற்படையினர் கைது
செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.மேலும் தங்களின்
ஆட்சியில் “இதுவரை 996 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்" என்று அறிவித்துள்ளார். இவர்கள் ஆட்சியின் போதுதான் அவர்கள் கைது செய்யப்பட்டனர்
என்பதைமட்டும் சொல்ல மறந்துவிட்டார்.
இன்று புதுதில்லியில் தமிழக மீனவர்கள் இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஜ்மாசுவராஜ் யை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாரதீய ஜனதா கட்சியின்
தலைவர்கள் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில்
கடல்வள ஆய்வாளர் சூரிய நாராயணராவ் கூறுகையில்,
“மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டும் போதுதான் பிரச்சினைகள் வருகிறது. இதனால்
பாதிக்கப்படுவது இலங்கையில் வசிக்கும் உங்கள் தொப்புள் கொடி உறவான தமிழ்
மீனவர்கள் தான். இதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியல் கட்சிகள்
எல்லாம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல்
கொடுக்காமல் எதிராக குரல் எழுப்புகின்றன். மேலும் சிங்கள அரசிற்கு ஆதரவாகவே செயல்படுகிறனர். தமிழக
அரசுகள் நவீனகாலத்திலும் தந்தியடிப்பது கடிதம், எழுதுவது என்று காகிதங்களை வீணடிக்கின்றனர்.
தமிழனின் கடல் எல்லையில் இரண்டு நாட்டு (தமிழ் நாடு
, தமிழீழ நாடு) தமிழர்களும் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்ற நிலையை எட்டும்போதுதான்
இந்தச் சிக்கல் தீரும். இதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரதீய - சிங்கள ஓநாய் கூட்டங்களின் வலையில் சிக்கினால்
தமிழனின் கதி மீனின் கதிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக