சனி, 26 மே, 2018

சாலை மறியல் -தோழர்கள் கைது

சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 26.5.2018  அன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

சிவகங்கை மாவட்டம்.
காரைக்குடியில்
இசுடெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூடக்கோரியும், போராடிய மக்கள் மீது
திட்டமிட்டு
துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறையை கண்டித்தும்,
இந்திய,பன்னாட்டு நிறுவனங்களை
தமிழ் நிலத்தை விட்டு வெளியேறகோரியும்,
மக்கள் விரோத தமிழகஅரசைக் கண்டித்தும்,
தமிழின பகை இந்தியஅரசை தமிழகத்தை விட்டு வெளியேறக்கோரியும்
தமிழ்த்தேசமக்கள்கட்சி தோழர்கள்
சாலை மறியல்- கைது.


























சனி, 14 அக்டோபர், 2017

தமிழர் அறநிலையத்துறை கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

இந்து அறநிலையத்துறை என்ற பெயரை தமிழர் அறநிலையத்துறை என மாற்றக் கோரி கடந்த 12.10.2017 அன்று மதுரையில் தமிழ்த்தேச மக்கள் கட்சி ஆர்பாட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் எடுத்த படங்கள்.

கண்டன முழக்கம்:
 https://www.youtube.com/watch?v=FlI13E3En6I

https://www.youtube.com/watch?v=Oa6Q5SjBh3I

 https://www.youtube.com/watch?v=ZSEuBNF-qcs







திங்கள், 2 அக்டோபர், 2017

இந்து அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத்துறை என மாற்று!

  இந்து அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டி போராட்டம்.
 நாள்: 12.10.2017 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: மதுரை
தமிழர் அறநிலையத் துறை – போராட்டம்
இந்து(ஆரிய) அடையாளங்களை மறுத்து
தமிழர் அடையாளங்களை மீட்கும் போராட்டம்.
**********************************************
சங்க காலத்திற்கு முன்பு தமிழர்கள் இயற்கையை வழிபட்டு வந்தனர். சங்க கால இலக்கியங்களை ஆராய்ந்தால் அச்சத்தின் காரணமாக இடி, மின்னல் கடல்கோள், தீ, விலங்குகள்,பாம்பு ஆகியவற்றை தமிழர்கள் வணங்கிவந்தனர்.
கி.மு ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு பாடப்பட்ட பல சங்க பாடல்களில் ஆசிவக கோட்பாட்டை தமிழர்கள் பின்பற்றியுள்ளது தெரிய வருகிறது.ஆசிவகம் கடவுள் மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டது. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற மெய்யியல்கோட்பாட்டை கொண்டவர்கள். தமிழர்கள் பிற இனத்தினரைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்களாக சங்க காலத்திலும் சங்கத்திற்கு முந்திய காலங்களிலும் விளங்கினார்கள்.
ஆரியர்கள் கிமு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு சிறிய அளவிலே வந்தனர். ஆடுமாடுகள் மேய்பதை தவிற அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. அப்போது அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்துவடிவம் இல்லை.கல்வியறிவற்றவறாக இருந்தனர். நெருப்பை தெய்வமாக வணங்கி அந்த வேள்வித்தீயில் உயிர்களை பழிகொடுத்தனர். எந்தவித போரிலும் ஈடுபடாத ஆரியர்கள் மன்னர்களை தங்களின் வேள்வி வளர்த்தல் என்னும் மந்திர தந்திரத்தால் தங்கள் வசமாக்கினர்.
மன்னர்களிடம் தாங்கள் வானுலகத்தில் உள்ள தேவர்களின் வழியில் வந்தநிலத்தேவர்கள் என்று நம்பவைத்தனர். தங்களின் யாகத்தைச் செய்தால் போரில் வெற்றியும், நாட்டுமக்களுக்கு நன்மையும், நாட்டிற்கு செல்வவளம் கிடைக்கும் என நம்ப வைத்து மன்னர்கனை தங்களின் சமஸ்கிருத மந்திரத்திற்கு அடிமையாக்கிவிட்டனர். புரோகிதச் சடங்குகளையும் மூட நம்பிக்கைகளையும் மன்னனின் ஒப்புதலுடன் மக்களிடம் பரப்பினர்.
தமிழர்கள் இயற்கையை வழிபட்டதோடு மன்னனை கடவுளாக கருதினார்கள். கோயில் என்பதே அரசனின் இல்லமாக இருந்தது. சங்ககால பாடல்களில் காதல், வீரம், போன்ற பதினெட்டு பாடுபொருள்களில் கடவுளை பாடுவது என்பது ஒருபாடுபொருளாக இருந்தது. கடவுளுக்கு தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
ஆரியர்கள் இங்கு வந்து குடியேறியதுடன் தமிழ்மொழியை கற்று பழம் இலக்கியத்தில் இடைச்சொருகளைச் செய்தனர். ஆரிய கருத்துக்களை இலக்கிம் வழியாக பரப்பினர். தமிழர்களின் முல்லைநிலக் கடவுளான மாயோனாகிய திருமாலையும், பாலைநில கடவுளான கொற்றவையையும், குறிஞ்சிநிலகடவுள் முருகனையும், நெய்தல்நில கடவுள் வருணனையும், மருதநில கடவுள் இந்திரனையும், சிவனையும் ஆரிய சூழ்ச்சியால் அவர்களின் கடவுளாக மாற்றிவிட்டனர். பின் ஆரிய கட்டுக்கதைகளை உருவாக்கி அந்த தெய்வங்களுக்குள் குடும்ப உறவையும் உருவாக்கியுள்ளனர்.
சங்க கால பாடல்கள் பலவற்றை ஆரியர்கள் அழித்துவிட்டனர். ஆரிய 7 கோட்பாட்டை எதிர்க்கும் திருக்குறளை அழிக்கமுயன்றனர். திருக்குறளை படிக்க சைவ, வைணவர்கள் தடுக்கப்பட்டனர். தீக்குறள் என இழித்துப் பாடினார்கள்.
ஆரியர்களின் இந்த சதிக்கு தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் அறியாமையால் உடன்பட்டுவிட்டதனால் தமிழகத்தில் நால்வர்ணகோட்பாட்டை புகுத்தினார்கள். தமிழையும் சமசுகிருத மொழியையும் கலந்து மணிப்பிரவல நடையை உருவாக்கினார்கள்.
ஆரிய கருத்துக்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமூகம் போராடி வருகிறது.இன்று பல மதக்கோட்பாடுகளை இணைத்து இந்து மதம் என கட்டியமைத்துள்ளது ஆரியம். இன்று இந்தியா முழுவதும் அரசியல் வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து தமிழர்களின் எஞ்சிய பண்பாட்டையும் உரிமையையும் பறிக்க ஆரியம் திராவிட கட்சிகளின் உதவியுடன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. நாம் இருப்பதை காப்பதற்கும் இழந்த உரிமைகளையும் பண்பாட்டையும் மீட்க போராட வேண்டியுள்ளது.
அந்த வகையில் நமது முன்னோர்கள் கட்டிய கோயில்களில் புகுந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான கருத்தியலை பரப்பிவரும் இந்து அறநிலையத்துறையை நாம் கைப்பற்றியாக வேண்டும். அது தமிழர்களின் அறநிலையத்துறையாக மாற்றயமைக்க நமது முதல்போராட்டத்தை தொடங்குவோம்.

தோழர் தமிழரசன் கலை விடுதலை


கடந்த 10.3.2014 அன்று மதுரையில் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் துணைத் தலைவர் தோழர்   தமிழரசன் கலை கைது செய்யப்பட்டார். அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் காளை, மாவட்ட செயலாளர்கள்  இளந்தனல் , கவியரசன் , கார்த்திக், மற்றும் தோழர் திருச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.






அவர்கள் மீதான குற்றச்சாட்டாக தமிழக நதிநீர் பிரச்சனையில் ,  கூடங்குளம்  அணு உலை ,  கச்சத்தீவு , மீனவர்கள் படுகொலை ஆகிய பிரச்சனைகளில் மத்திய   அரசுக்கு எதிராக போராடியதாகவும்  தமிழகத்திலும் , புதுச்சேரியிலும் குண்டுவைத்ததாகவும் அவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர்கள் மீது 3 வழக்குகள் போட்டதுடன் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அவர்கள் 3  ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 அவர்களில் தோழர் தமிழரசன் கலை அவர்கள் கடந்த 10.9.2017 அன்று பிணையில் விடுதலை செய்யப்பாட்டார். அவரை தமிழ்த்தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தலைமையில் தோழர்கள் சிறையின் வாயிலில் வரவேற்றனர். தனது விடுதலைக்காக போராடிய தோழர்களுக்கு துணைத்தலைவர் தமிழரசன் கலை நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தோழர்தமிழரசனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தோழர் தமிழரசன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.




 இந்த நிகழ்வில் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர்கள் மற்றும் பல அமைப்பைச்  சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு தமிழ்த்தேச தலைவர்  தமிழரசனுக்கு  வீர வணக்கம் செலுத்தினார்கள்.


 காவி பாசிச ஒற்றை இந்தியாவை மறுப்போம்!
தேசிய இனங்களின் உரிமையை மீட்போம்!

 என்ற முழக்கத்துடன்  தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.






திங்கள், 5 செப்டம்பர், 2016

தோழர் தமிழரசனின் 29 ஆம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்வு

தமிழ்த்தேசிய தலைவர் தோழர் தமிழரசன் அவர்களின் 29 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்விற்கு காவல்துறை தடைவிதித்தாலும் தோழர்கள்  எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.



புதன், 18 மே, 2016

முள்ளிவாய்காலுக்கு முற்றுப்புள்ளி


.
   ழத்தில் நடந்த  கொடூரமான இன அழிப்பை நினைவு கூறும் நாள் இன்று. ஈழத்திலும் , இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்த கோரப் படுகொலைகளை நினைவு கூர்ந்து பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.  ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளுக்கும், தாக்குதலில் மரணமடைந்த  மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.
    
   தங்களது போராளிகளையும் உறவுகளையும்  இழந்த ஈழமக்கள்  இந்த நிகழ்வை நடத்துவது இயல்பானது. தங்களது விடுதலைக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்துவதன் மூலம் தங்களது தாயக விடுதலைக்கான கனவு இன்னும் தொடர்கிறது எனபதை உறுதிப்படுத்துகின்றனர்.
  
     இதேபோல்  உலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நினைவு நிகழ்வை நடத்துவது தங்களின் தாயக விடுதலைக்கு அடுத்தகட்ட நகர்வை சர்வதேச நாடுகளின் உதவியுடன் செய்வதற்கான  ஒரு செயல்பாடாக உள்ளது.
     

 இந்தியாவில் உள்ளவர்கள் இந்த நிகழ்வை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் உள்ளது. இந்த இனப்படுகொலையை செய்வதற்கு சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்தது இந்தியா அரசு. இந்திய அரசு என்றால் சோனியா அரசு அல்லது மன்மோகன்சிங் அரசு என்றும், கருணாநிதி அரசு என்றும் அதேபோல சிங்கள அரசு என்றால் அது ராசபக்சே அரசு என்றும் தவறாகப் பொருள் கொள்கிறார்கள்.

    தமிழீழ மக்களைப் படுகொலை செய்த இந்திய ராணுவத்தையும், காவல் துறையையும் கொண்ட இந்திய அரசு என்பது நிலையானது, ஆட்சி என்பது மட்டுமே மாறக்கூடியது.
  
       இந்தியாவில் ஈழம் தொடர்பான கொள்கையில் இந்திய அரசின் நிலைப்பாடு என்பது ஒன்றுதான். காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும் பாரதீய சனதா ஆட்சியாக இருந்தாலும் இலங்கையை தங்களது நட்புநாடாக கருதி  சிங்கள அரசுக்கு ஆயுதங்களும் பயிர்ச்சியும் தொடர்ச்சியாக அளித்து வருகின்றனர்.
  

        தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களும், தமிழக மக்களின் வரியை சம்பளமாக வாங்கக்கூடிய இந்திய ராணுவமும், காவல்துறையும் இந்த இனப்படுகொலையை சிங்கள அரசுடன் சேர்ந்து செய்துள்ளது. இந்தியாவில் 9 கோடி தமிழர்கள் இந்தியனாக இருந்து இனஅழிப்பை  தடுக்காமல் விட்டுவிட்டோம்.

      இப்போது  முள்ளிவாய்கால் முடிவல்ல எனவும்,   நான்காம் கட்ட போர் நடக்கும் எனவும் கடந்த 6 ஆண்டுகளாக பலர் வீன் ஜம்பம் அடித்துக்கொள்கிறார்கள். சிலர்  மெழுகுவர்த்தி ஊர்வலம் என ஏதோ ஜெபக்கூட்டத்தை கூட்டி ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்கிறார்கள்.   
  
   இந்த இனப்படுகொலைக்குப் பின் எழுந்த தமிழின எழுச்சியை அடக்க , தமிழ்த்தேச  ஒருங்கிணைவைத் தடுக்க  திராவிட கட்சிகளும், திராவிட  இயக்கங்களும், சில  பெரியார் தொண்டர்களும்  பேதமின்றி  கூட்டுசேர்ந்துள்ளனர். இவர்கள் திராவிடதுக்கு முட்டுக்கொடுத்து நிற்கின்றனர். ஒருபக்கம் ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர்வடிக்கும் இவர்கள் மறுபக்கம் தமிழ்தேச விடுதலைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

   கடந்த சில ஆண்டுகளாக இனப்படுகொலைக்கு எதிராக வீர முழக்கமிட்ட பல  இளைஞர்களை இவர்கள் தங்கள் வழியில் இழுத்துச் சென்று  ஒப்பாரி வைக்கும் கூட்டமாக மாற்றிவிட்டனர்.
    
     அவர்கள் ஏற்றும் மெழுகுவர்திகளும் , வருடாந்திர ஒப்பாரிகளும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை. தனது சுதந்திரத்தை நேசிக்காதவன், தமிழ்த்தேசிய இன விடுதலைக்கு எதிரானவன்  ஈழவிடுதலைக்கு குரல் கொடுப்பது என்பது போலியானது மட்டுமல்ல அவன் செயல்  ஒரு ஏமாற்றுவித்தையும் கூட.

   முள்ளிவாய்கால் முடிவல்ல அது தொடரும் என்றால் அங்கு நடந்த இனப்படு கொலை தொடரும் என கூறுகிறார்களா? அப்படியானால் அது இந்திய, சிங்களவன் குரலாகத்தானே இருக்கமுடியும்?.

   மாறாக  மவுனிக்கப்பட்ட ஆயுதங்களின் செயல்பாட்டிற்கு முடிவல்ல என்றால்,  இன அழிப்புக்கு காரணமான இந்தியத்திற்கு எதிராக ஆயுதங்களை கூடவேண்டாம் அவர்கள் தங்களின்  கரங்களையாவது நீட்டி இருக்கவேண்டாமா?.


தமிழக இளைஞர்களே சிந்தியுங்கள்!
முள்ளிவாய்கால் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
இந்தியாவிற்கு எதிரான உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.



தமிழ்த் தேசம் வெல்லட்டும் !                     தமிழீழம் மலரட்டும்!