திங்கள், 2 அக்டோபர், 2017

இந்து அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத்துறை என மாற்று!

  இந்து அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டி போராட்டம்.
 நாள்: 12.10.2017 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: மதுரை
தமிழர் அறநிலையத் துறை – போராட்டம்
இந்து(ஆரிய) அடையாளங்களை மறுத்து
தமிழர் அடையாளங்களை மீட்கும் போராட்டம்.
**********************************************
சங்க காலத்திற்கு முன்பு தமிழர்கள் இயற்கையை வழிபட்டு வந்தனர். சங்க கால இலக்கியங்களை ஆராய்ந்தால் அச்சத்தின் காரணமாக இடி, மின்னல் கடல்கோள், தீ, விலங்குகள்,பாம்பு ஆகியவற்றை தமிழர்கள் வணங்கிவந்தனர்.
கி.மு ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு பாடப்பட்ட பல சங்க பாடல்களில் ஆசிவக கோட்பாட்டை தமிழர்கள் பின்பற்றியுள்ளது தெரிய வருகிறது.ஆசிவகம் கடவுள் மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டது. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற மெய்யியல்கோட்பாட்டை கொண்டவர்கள். தமிழர்கள் பிற இனத்தினரைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்களாக சங்க காலத்திலும் சங்கத்திற்கு முந்திய காலங்களிலும் விளங்கினார்கள்.
ஆரியர்கள் கிமு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு சிறிய அளவிலே வந்தனர். ஆடுமாடுகள் மேய்பதை தவிற அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. அப்போது அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்துவடிவம் இல்லை.கல்வியறிவற்றவறாக இருந்தனர். நெருப்பை தெய்வமாக வணங்கி அந்த வேள்வித்தீயில் உயிர்களை பழிகொடுத்தனர். எந்தவித போரிலும் ஈடுபடாத ஆரியர்கள் மன்னர்களை தங்களின் வேள்வி வளர்த்தல் என்னும் மந்திர தந்திரத்தால் தங்கள் வசமாக்கினர்.
மன்னர்களிடம் தாங்கள் வானுலகத்தில் உள்ள தேவர்களின் வழியில் வந்தநிலத்தேவர்கள் என்று நம்பவைத்தனர். தங்களின் யாகத்தைச் செய்தால் போரில் வெற்றியும், நாட்டுமக்களுக்கு நன்மையும், நாட்டிற்கு செல்வவளம் கிடைக்கும் என நம்ப வைத்து மன்னர்கனை தங்களின் சமஸ்கிருத மந்திரத்திற்கு அடிமையாக்கிவிட்டனர். புரோகிதச் சடங்குகளையும் மூட நம்பிக்கைகளையும் மன்னனின் ஒப்புதலுடன் மக்களிடம் பரப்பினர்.
தமிழர்கள் இயற்கையை வழிபட்டதோடு மன்னனை கடவுளாக கருதினார்கள். கோயில் என்பதே அரசனின் இல்லமாக இருந்தது. சங்ககால பாடல்களில் காதல், வீரம், போன்ற பதினெட்டு பாடுபொருள்களில் கடவுளை பாடுவது என்பது ஒருபாடுபொருளாக இருந்தது. கடவுளுக்கு தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
ஆரியர்கள் இங்கு வந்து குடியேறியதுடன் தமிழ்மொழியை கற்று பழம் இலக்கியத்தில் இடைச்சொருகளைச் செய்தனர். ஆரிய கருத்துக்களை இலக்கிம் வழியாக பரப்பினர். தமிழர்களின் முல்லைநிலக் கடவுளான மாயோனாகிய திருமாலையும், பாலைநில கடவுளான கொற்றவையையும், குறிஞ்சிநிலகடவுள் முருகனையும், நெய்தல்நில கடவுள் வருணனையும், மருதநில கடவுள் இந்திரனையும், சிவனையும் ஆரிய சூழ்ச்சியால் அவர்களின் கடவுளாக மாற்றிவிட்டனர். பின் ஆரிய கட்டுக்கதைகளை உருவாக்கி அந்த தெய்வங்களுக்குள் குடும்ப உறவையும் உருவாக்கியுள்ளனர்.
சங்க கால பாடல்கள் பலவற்றை ஆரியர்கள் அழித்துவிட்டனர். ஆரிய 7 கோட்பாட்டை எதிர்க்கும் திருக்குறளை அழிக்கமுயன்றனர். திருக்குறளை படிக்க சைவ, வைணவர்கள் தடுக்கப்பட்டனர். தீக்குறள் என இழித்துப் பாடினார்கள்.
ஆரியர்களின் இந்த சதிக்கு தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் அறியாமையால் உடன்பட்டுவிட்டதனால் தமிழகத்தில் நால்வர்ணகோட்பாட்டை புகுத்தினார்கள். தமிழையும் சமசுகிருத மொழியையும் கலந்து மணிப்பிரவல நடையை உருவாக்கினார்கள்.
ஆரிய கருத்துக்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமூகம் போராடி வருகிறது.இன்று பல மதக்கோட்பாடுகளை இணைத்து இந்து மதம் என கட்டியமைத்துள்ளது ஆரியம். இன்று இந்தியா முழுவதும் அரசியல் வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து தமிழர்களின் எஞ்சிய பண்பாட்டையும் உரிமையையும் பறிக்க ஆரியம் திராவிட கட்சிகளின் உதவியுடன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. நாம் இருப்பதை காப்பதற்கும் இழந்த உரிமைகளையும் பண்பாட்டையும் மீட்க போராட வேண்டியுள்ளது.
அந்த வகையில் நமது முன்னோர்கள் கட்டிய கோயில்களில் புகுந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான கருத்தியலை பரப்பிவரும் இந்து அறநிலையத்துறையை நாம் கைப்பற்றியாக வேண்டும். அது தமிழர்களின் அறநிலையத்துறையாக மாற்றயமைக்க நமது முதல்போராட்டத்தை தொடங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக