சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை அல்ல என்பதற்கு நாம் நான்கு
வழக்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் தொடர்பான வழக்குகள்.
முதலில் ஜெயல்லிதா கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.
18 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு. இந்த வழக்கை விசாரணை செய்த
அமர்வு நீதிமன்ற நீதிபதி குன்கா செயலலிதா உள்ளிட்ட 4 நபர்களும் குற்றவாளிகள் என 27.09.2014ல் அறிவித்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் தண்டனை வழங்கினார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.12.2014 அன்று பிணைவழங்கியது.
பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது
செல்லாது என தொடரப்பட்ட வழக்கை இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் அடுத்தவாரமே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு
அவர்கள் 21.04.2015 அன்று விசாரணை செய்து 27.04.2015 அன்று தீர்ப்பு வழங்கினர். 12.05.2015 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி
ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். நீதிபதி குனகாவிற்கு கணக்கு போடத் தெரியவில்லை
என்று கூட்டி கழித்துப் பர்த்து ‘விடுதலை” என்று அறிவித்துவிட்டார். இந்த வழக்கு என்னவேகத்தில் நடந்தது
எப்படி விடுதலை கிட்டியது என்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச்
சொல்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பின்னனியில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியும் முன்னால் தலைமைநீதிபதியும்
உள்ளதாகவும் 1000 கோடிகள் பேரம் என்றும்
சொல்கிறார்கள்.
அடுத்தாக இரண்டாவது வழக்கு சல்மான்கான்
வழக்கு. கடந்த 2002ல் குடித்துவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டி ஒருவரை மரணமடைய
செய்து நான்கு நபர்கள் காயம்பட்ட வழக்கில்
சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி மும்பை அமர்வு நீதிபதி தேச்பான் முன்டே கடந்த 06.05.2015 அன்று மாலை தீப்பளித்தார். அன்றைய தினமே சிலமணி நேரங்களிலேயே மும்பை
உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.
மூன்றாவதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 1987ல் சென்னையில் சூளைமேடு பகுதியில் பொதுமக்களை
கண்மூடித்தனமாக டக்லஸ் தேவானந்தாவும் அவரது ஆட்களும் சுட்டதில் திருநாவுக்கரசு என்ற
மாணவர் உயிர் இழந்தார் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டக்லஸ்
கடந்த 1993 ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். பின் இந்திய உளவுத்துறையின் கட்டளைப்படி, உளவுத்துறை துணையுடன் இலங்கை சென்று சிங்கள அரசிற்கு ஆதரவாக செயல்பட்டார்.
தமிழர்களை படுகொலை செய்வதில் சிங்கள அரசிற்கு துணைநின்றார்.
கடந்த 1994ல் டக்லஸ் தேடப்படக்கூடிய குற்றவாளியாக
சென்னை நீதிமன்றம் அறிவித்தது.அனால் அவரை கைது செய்ய தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2010ல் டக்லஸ், ராசபக்சேவுடன்
டில்லி வந்தபோது அவரை கைது செய்ய சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
டக்லஸ் தன்மீதான பிடிகட்டளையை ரத்து செய்ய
பல மனுக்கல் தாக்கல் செய்தார்.ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
கடந்த 2014ல் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் சுப்பிரமணிய சாமியின் வழக்கறிஞரை வைத்து ஒரு
வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் ஏற்றுக் கொண்டு டக்லஸ் இலங்கை
தூதரகத்தில் இருந்து கொண்டே காணொளி மூலம் வழக்கை நடத்தலாம் என உத்தரவிட்டார். டக்லஸ்க்காக நீதிபதியிடம் சிபாரிசு
செய்து இந்த தீர்ப்பை அவருக்கு வாங்கித்தந்தவர்களில் இரண்டுபேர் முக்கியமானவர்கள் ஒருவர்
சு.சாமி இரண்டாமவர் க.மொழி. இதனால் சாமியின் வழக்கறிஞருக்கு உயர்
பதவி அளிக்கப்பட்டது. இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும்
இந்தவகையான தளர்வு இதுவரை வழங்கப்பட்டதில்லை.( இந்த தீர்ப்பு தாவுத் இப்பராகிமுக்கு
பொருந்தாதாம்).
நான் சொல்லப்போகும் நான்காவது வழக்கு 7 தமிழர்கள் வழக்கு. தமிழக அரசு விடுதலை செய்வதாக உத்தரவிட்டும் , உச்ச நீதிமன்றத் தடையால் விடுவிக்கப்படாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும்
நாதியற்று தமிழர்களின் வழக்கு. உச்சநீதிமன்றம் 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க
வேண்டும் என உத்தரவிட்டு 15 மாதங்கள் ஆகியும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை கூட்டமலேயே
உச்சநீதிமன்றம் காலம் கடத்தி வருகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்ட்ட நீதியாகும்
என்பது சட்டத்தில் இருக்கலாம் ஆனால் நடைமுறையில் இல்லை.அதிகாரம் இல்லாதவர்கள் அடிமைகள். அவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்காது.பணம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு
மட்டுமே இந்த (இந்திய)சட்டமும் நீதித்துறையும் வால் ஆட்டும்.
நமது தேசத்தை மீட்போம்.
தமிழர்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக