கடந்த 10.3.2014 அன்று மதுரையில் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் துணைத் தலைவர் தோழர் தமிழரசன் கலை கைது செய்யப்பட்டார். அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் காளை, மாவட்ட செயலாளர்கள் இளந்தனல் , கவியரசன் , கார்த்திக், மற்றும் தோழர் திருச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டாக தமிழக நதிநீர் பிரச்சனையில் , கூடங்குளம் அணு உலை , கச்சத்தீவு , மீனவர்கள் படுகொலை ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசுக்கு எதிராக போராடியதாகவும் தமிழகத்திலும் , புதுச்சேரியிலும் குண்டுவைத்ததாகவும் அவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர்கள் மீது 3 வழக்குகள் போட்டதுடன் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அவர்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தோழர் தமிழரசன் கலை அவர்கள் கடந்த 10.9.2017 அன்று பிணையில் விடுதலை செய்யப்பாட்டார். அவரை தமிழ்த்தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தலைமையில் தோழர்கள் சிறையின் வாயிலில் வரவேற்றனர். தனது விடுதலைக்காக போராடிய தோழர்களுக்கு துணைத்தலைவர் தமிழரசன் கலை நன்றி தெரிவித்துக்கொண்டார்.