தோழர் லெனின் தமிழ்நாடு விடுதலைப்படையின்
தளபதியாக இருந்து செயல்பட்டார்.கடந்த 1994 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். தோழர் லெனின் அவர்களின் 22
ஆம் ஆண்டு நினைவையொட்டி பெண்ணடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் 29.03.2016 காலை 10
மணிக்கு தமிழ்த்தேச மக்கள் கட்சி தோழர்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தோழர் லெனின் நினைவிடத்தில் கூடியத் தோழர்களை கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் தோழர் பிரபாகரன் வரவேற்புரையாற்றி வரவேற்க தோழர் செந்தமிழ்க்குமரன் தலைமையேற்றார்.தோழர்கள் பொன்னிவளவன்,மாயவேல்,நாகவரசன் முன்னிலை வகித்தனர்.
கட்சித்தோழர்கள் வெற்றித்தமிழன்,குமார்,வெளிச்சம் மேகநாதன்,..மாந்தநேயப் பேரவை பஞ்சு ,தமிழ்த்தேசியப் பேரியக்கம் முருகன்,புலவர் கலியபெருமாள் தம்பி மாசிலாமணி,கட்சி பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன்,தலைவர் புகழேந்தி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்ற தோழர் லெனின் தம்பி இசுடாலின் நன்றியுரையாற்றினார்.
நிகழ்வில் தோழர் சுந்தரம்,லெனின் சகோதரர் பகத்சிங் உட்பட நண்பர்கள் உறவினர்கள் பல்வேறு இயக்க ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
கட்சியின் அமைப்புச் செயலாளர் எழுதியுள்ள “தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக் களமும் “ நூல் வெளியிடப்பட்டது.
தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும் நூலை தோழர் லெனினின் சகோதரி வாசுகி அக்கா இல்லத்தில் கட்சித்தலைவர் புகழேந்தி வெளியிட அக்காவும் அவரது கணவர் கதிர்வேலும் பெற்றுக்கொண்டனர்.
தோழரின் நினைவேந்தல் நிகழ்வும் புத்தகவெளியீடும் பல நெருக்கடிகளைக் கடந்து சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து தோழர்களுக்கும் பரப்புரை செய்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்த்தேச மக்கள் கட்சி