செவ்வாய், 22 செப்டம்பர், 2015

தோழர் பாலன் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்சி


 தோழர் பாலன் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்சி

சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம் 

 ஈழத்தில் பிறந்து  தமிழகத்திற்கு முறையான ஆவணங்களுடன்1990ல்  வந்தவர் தோழர் பாலன். தமிழக காவல்துறை  அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலும் ,பல்வேறு சிறப்பு முகாம்களிலும்  அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னரும் சிறப்பு முகாமில் இருந்த தோழர் பாலன் கடந்த 1998ல் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது லண்டனில் வசிக்கும் அவர் எழுதிய 'சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம்'என்ற நூல் கடந்த 21.09.2015 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.



மூத்த வழக்கறிஞர் இராதாகிருட்ணன் வெளியிட தோழர் பாலன் அவர்களின் வழக்கறிஞர் கிரிதர் பெற்றுக் கொண்ட காட்சி.





 வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.பால்கனகராஜ், மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் வழக்கறிஞர் சக்திவேல், வழக்கறிஞர் ஜெயக்குமார், ஊடகவியலாளர் திரு.குணசேகரன்  ,தமிழர் கழகம் தமிழ்முகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு  கருத்துரை வழங்கினார்கள்.

 இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தோழர் தடா ரகீம் , தமிழ்த்தேச மக்கள் கட்சி தோழர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.